கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்

திருவாடிப் பூரத் திருவிழா' கோதை
பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்' வில்லிபுத்தூரில்
விட்டுசித்தனாம் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை
பிள்ளைப் பருவத்திலேயே கண்ணனாம் ரங்கன்மீது
அளவிலா ஆசைவைத்து காதல் கொள்கின்றாள்
தந்தை ரங்கனுக்காக தொடுத்துவைத்த பூமாலையை
தானணிந்து அழகுபார்த்து கண்ணனுக்கு அதையே
சூட வைக்கிறாள் சூடிக்கொடுத்த ஆண்டாளவள்

இதோ ஆண்டாள் நாச்சியார் தன நாயகன்
ரங்கனோடு தேரில் ஏறி நிற்கின்றாள்
மணாளனும் மங்கையுமாய் அப்பப்பா அது
காண்பதற்கு அழகுஅழகு காண
கண்கோடி வேண்டுமே அதைக் காண
ஊர்வலம் ... தேர் பத்தர்குழாம் இழுக்க
ஓடவில்லை.... மெல்ல மெல்லவே நகர்கிறது
இல்லை இல்லை தேர் நடக்கிறது
ஏனெனில் அதில் பிள்ளைப் பருவத்தால்
கோதையல்லவோ தனக்குகந்தான் ரங்கனோடு
பவனி வருகிறாள் அவன் முன்னாள் இவள் பின்னால்
இப்போது இருவரும் கைகோர்த்து ஒன்றாய்
இவன் மாலை அவள் அணிய அவள்மாலை இவன் அணிய
காணக்கண்கோடிவேண்டும் ஐயா இந்த
இறைவரின் திருத்தேர் உலாக் காண
வாழ்க பல்லாண்டு எங்கள் கோதை நாயகி
வாழ்க வாழ்க பல்லாண்டு எங்கள் ரெங்கமன்னாரும்
வாழ்க பல்லாண்டு நானிலத்தில் கோதை
தமிழ் ஐஐந்தும் ஐந்தும்.' வேதமனைத்துக்கும்
வித்தாம்' அது இனிய தமிழ் வேதம் அதுவே
நம்மைஉய்விக்கும் 'கோதாபநிஷத்; அதுவே
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு கோதை
பாடிய ஒருநூற்று நாற்பத்திமூன்று பாக்கள்
'நாச்சியார் திருமொழியும்'
இவற்றைக் கற்போம் கற்று தினமும்
பாடிமகிழ்வோம் அன்னையின் ஆசிபெறுவோம்
இகபரம் இன்பமெல்லாம் பெறுவோம்
பிறந்ததன் பயனை உணர்ந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Jul-20, 2:24 pm)
பார்வை : 148

மேலே