உன்னை தொட்டு தூக்கி ரசிக்க முடியாமல் 555

என் மகனே...
புத்தம் புது பூவாய் பூத்தாய்
என் வாழ்வில்...
தத்தி தவழ்ந்தாய்
கைகளால் நடந்தாய்...
மெல்ல எழுந்து
முதல் அடிவைக்கிறாய்...
நீ எடுத்து வைக்கும்
முதல் அடியை...
என் கைகளில் ஏந்த முடியாத
துரதிஷ்டசாலி நான்...
உன் அழுகை ,சிரிப்பு,
கோபம் ,குறும்பு எல்லாம்...
அருகில் இருந்து ரசிக்க
முடியாதவன் நான்...
என் மகனே உன்னை தொட்டு
தூக்கி ரசிக்க முடியாமல்...
கைபேசியில் ரசிக்கிறேன்
தினம் தினம் உன்னை...
கைபேசியில் உன்னுடன்
சிரித்து பேசினாலும்...
அணைத்தபிறகு கண்கள்
கலங்குதடா தங்கமே...
வேகமான உலகில்
வேகமாக பொருள் ஈட்ட...
நானும் வந்தேன்
அயல் நாட்டிற்கு...
விரைவில் வருவேன் உன்னை
நெஞ்சில் அனைத்து கொஞ்சிட...
நம் தாய் நாட்டிற்கு...
உன்னை தொட்டு தூக்கி
கொஞ்ச முடியாத அப்பாவை...
மன்னித்துவிடு
என் தங்கமே.....