முகம் இல்லாத மனிதன்
முகம் இல்லாத மனிதன்
இருட்டு இல்லாத இரவு
நிலவு இல்லா வானம்
இதழ்கள் இல்லா பூக்கள்
அலைகள் இல்லா கடல்
கோபுரம் இல்லா கோயில்
திரி இல்லா விளக்கு
காந்தி இல்லா ரூபாய்
ஆசையில்லா மனிதன்
நான் முகம் இல்லா மனிதன்.
லஞ்சம் வாங்காத அரசியல்வாதி
பிச்சைக்காரன் இல்லாத கோயில் வாசல்
மாமூல் வாங்காத தமிழக போலிஸ்
உண்மையாக வேலை செய்யும் அரசாங்க ஊழியர்
நான் முகம் இல்லாத மனிதன்
சினிமா பார்க்காத தமிழர்கள்
இலவசம் கொடுக்காத அரசாங்கம்
நகை விரும்பாத பெண்கள்
டாஸ்மாக் இல்லாத தமிழகம்
நான் முகம் இல்லாத மனிதன்
சுயநலமில்லா மனிதர்கள்
பண்டிகையைப் பகிர்ந்து கொண்டாடும் எண்ணம்
மதமற்ற மாநிலம்
சாதியற்ற சமூகம்
அன்பை ஆராதனை செய்யும் மக்கள்
நான் முகம் இல்லாத மனிதன்.
- பாலு