கருமையும் அழகே
கார்மேகங்கள் சேர்ந்த
கார் பாவை அவள்..
பார்கின்றவர் பார்வைக்கு கருமை உருவம் அவள். மாலா என்று பெயர் இருந்தும் கருப்பி என்றே அனைவரும் அழைப்பர்.
அவள் உள்ளுக்குள் தான் எத்துணை கேள்விகள்,
சிறு வயதில் கருமை அவளுக்கு வலி கொடுத்திடவில்லை, சிறு பிள்ளைகள் கருமையை வெறுபதில்லை போலும் என்று நினைத்தாள்.
வயது வர வர எத்துணை கேலி, எத்துணை கிண்டல், எத்துணை ஏமாற்றம், எத்துணை சகிப்பு, எத்துணை விரக்தி. எண்ணி பார்த்தவளாய் நிற்கிறாள்.
படிக்கும் காலத்தில் அவள் தோழி சிகபாய் இருப்பதால் எத்துணை காதல் வசனங்கள் அவளிடம் வந்தன, ஆனால் இவளிடம் ஒரு நட்பு வசனங்கள் கூட வந்ததில்லை.
ஆண் கருமை என்றால் ஏற்று கொள்ளும் உலகம் ஏன் பெண் கருமை என்றால் கிண்டல் செய்கிறது கேள்வியுடன் அவளை கண்ணாடியில் பார்த்து கொண்டு இருந்தாள்.
வேலை செய்யும் இடங்களிலும் கருமை என்ற கேலி.
எல்லாம் எண்ணி எண்ணி கண்ணாடியில் தன்னை தானே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
பலரின் நிராகரிப்பு பெண் கருமை என்று அவள் முன்னே காயப் படுத்தியவர்கள் எத்துணை பேர், பெண் கருப்பாக இருக்கிறாள் வரதர்ச்சனை கொஞ்சம் அதிகம் வேண்டும் என்று கேட்டவர்கள் எத்துணை பேர்.
ஒவ்வொரு முறையும் அவளை அலங்கரித்து அலங்கரித்து அவளுக்கே அலுப்பு தட்டியது.
இன்றைய தினம்,
அவளை பெண் பார்க்க வருவதால் அவளை அலங்கரித்து வைத்திருந்தார்கள் உறவுகள்.
இது இன்னும் எத்துணை நாள் தொடரும் என்று மனசு வெறுத்தவளாய் பார்த்து கொண்டு இருந்தாள்.
பல பல கேள்விகள் அவள் மனதில்
பதில் இந்த சமூகம் தான் சொல்ல வேண்டும்.
கருமை ஒன்றும் வெறுக்க வேண்டிய விஷயம் இல்லையே!
மனதை தேத்தியவளாய் வாசலை பார்த்துக் கொண்டு இருந்தாள்.