சகி
மனம் விட்டு பேச நினைத்தாலும்
வார்த்தைகள் ஒட்டிக்கொள்கிறது வறட்சியாய்
உள்ளார்ந்த வார்த்தைகள்
உமிழ்நீரோடு கலந்து போகிறது
கண்ணீர் பெருகி
கடல் நிறை உப்பளமாய் மாறிப்போகிறது
தட்டுத்தடுமாறி வார்த்தைகள்
திக்கி திக்கி விக்கித்துப் போகிறது
விளையாட்டாய் ஒரு செல்ல சண்டை
வினையாகி இனணயாமல்
விலகி நிற்கிறோம் சகி
இரு துருவங்களாய்