மன கதவு
என்னவளின் முகம்
வாடிய மலராய்
அந்தியில் சாய்ந்திருக்க
காரணம்...
நான் வினவ..! !
அவளோ
தொட்டால் சிணுங்கி போல்
மேலும்
சுருண்டு கொண்டாள்..! !
இரும்பு கோட்டையின்
கதவை திறந்து விடும்
சக்தி எனக்கு இருந்தும்...! !
என்னவளின்
"மன கதவை" திறக்க
பகீரதப் பிரயத்தனம்
பல செய்தும்
முடிவில்
"தோல்விதான்"
வெற்றி பெற்றது.
--கோவை சுபா