உலகை வலம் வந்த
நல்ல மா மனிதர்
நற்பண்பு கொண்ட
நெஞ்சுறுதிக்காரர்—தான்
அவமானப் பட்டதால்
அந்நியனை வெறுத்தாலும்
இந்திய மக்களை நேசித்த
அற்புத மனிதர்
மக்கள் நலனில்
அக்கறை கொண்டவர்
மூச்சு உள்ளவரை
முழு மனதாய் போராடி
மகத்தான சாதனை படைத்து
தன் நாட்டுக்கும் உரமானார்
தனது நாடு முன்னேற
தென்னாப்பிரிக்காவில்
காந்தியடிகள் இரயிலில்
பயணித்தபோது—நிறவெறி
பிடித்த வெள்ளையன் ஒருவன்
நடு இரவில், நடுங்கும் குளிரில்
ஓடும் இரயிலிலிருந்து காந்தியை
கீழே தள்ளி, உடைமைகளையும்
வீசியெறிந்தான்
எழுந்தார்,இனவெறியை
எதிர்த்து ஒற்றை மனிதராய்
ஆயுதமின்றி போராடி வெற்றி கண்டார்
இனவெறி முடிவுக்கு வந்தது,
இந்திய நாடும் சுதந்திரம் பெற்றது
அந்த ஒற்றை வேட்டி, துண்டோடு
உலகை வலம் வந்த மகாத்மாவால்