காதல் என்றும் சுகமே
அந்தி கருக்கலில்
ஒத்தயடி பாதையில்
உன்னுடன் கைகோர்த்து
நடக்கையில்...! !
பதினாறு வயதின்
வாலிப குறும்புகளை
எல்லை மீறாமல்
செய்து மகிழ்ந்த
அந்த நாட்களை...! !
ஆயிரம் பிறைகள்
கடந்த பின்பும்
பசுமையாக நினைவில்
நிலைத்து நிற்க...
அந்த நினைவுகளை
ரசித்து மகிழ்வது...! !
ஆஹா..ஆஹா...
என்ன சுகம்...என்ன சுகம்...
காதல் மயக்கம்
தந்த அந்த சுகம்...! !
--கோவை சுபா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
