காதல்

காற்று சுழலில் சிக்கிய
மேகமாய்
காதால் சுழலில் சிக்கிய
மனமே...

காற்றில் கலந்த
முகிலாய்
காதலில் கலந்த
மனமே
தல்லாடுதே
தவழ்ந்தாடுதே...

உன் தனிமையை
பிரிந்த என்
மனமும்
மேகத்தில் மொகம்
கொண்டு மறையும்
நிலவாய் உன்னையே
நினைத்து வாடுதே ...

உன்னில் கலந்த
நானும்
என்னில் கலந்த
நீயும்
ஏனோ தெரியல
இனைய மறுக்கிறோம்...

இதயம் ஒன்றானாலும்
நம்மை பிரிக்க நினைக்குது
ஓரு சாதி -ஆனா
நீ தான்
எனக்கு பொஞ்சாதி

நம் இதயத்தை
நொறுக்கும் சாதி
இது காதல் சதியல்ல
இது சாதியின் சதியடி...

உன் தோலில்
நான் சாய
என் தேகம் முழுதும்
நீ வந்தாய்..

காதல் மயிலாய்
என் காலடியில்
விழுந்தாய்..

ஆலம் விழுதாய்
நானிருக்க
ஏன்டி நீயும்
ஆகாயம் பார்க்கிறாய்

காதல் கழுகாய்
நான் இருக்க
எதையோ நீ
யோசிக்கிறாய்...

எது வந்தாலும்
எந்தடிவந்தாலும்
உன்னையே நான்
அடைவேன்
உன்னிடம் சரண்
அடைவேன் ....

நம் உயிர்
போனாலும்
நம் உள்ளம் வெகாது
அந்த சாதி நெருப்புல...

நீ யும்
கொஞ்சம் வா புள்ள
நம் காதல் நெருப்புல

மல்லிகை பூவாய்
இனைந்தே தீருவோம்..
கொஞ்சம் மலர்ந்தே தீர்வோம்
இந்த பூலோகப் பூப்பந்தில்.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (3-Aug-20, 1:41 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
Tanglish : kaadhal kazhugu
பார்வை : 60

மேலே