தமக்-கை அவள்

*அப்பா பாக்கெட் சில்லரை
சில எடுத்தேன்,
எண்ணும் அறையில்
உன்னிடம் சிக்கி விட்டேன்.
*அன்றிலிருந்து நாங்கள்
கடையின் தினசரி வாடிக்கையாளர்கள்..
*அடித்து சண்டைபோடுவோம்
அடுத்தும் சண்டையிடுவோம்,
எப்படி சொல்ல நம் உறவை..
*வெட்டிய போதும்
துளிரும் மரக்கிளையது…
*வெளியில் அக்காவாகவும்
வீட்டில் மக்காகவும்
அழைத்துப் பழகிவிட்டாள்- நானும்
அணைத்துப் பழகிவிட்டேன்
*மடிக்கணினி காலத்தில்
மடியில் என்னை,தூங்க
வைத்தாய் கண்மனி
*உன் வளர்ச்சி கண்டு
நான் வளர்ந்து விட்டேன்
நீ ஒவ்வொரு முறை
என்னிடம் சந்தேகம் கேட்கும் போதும்...
*உங்களுக்கு தெரியுமா..?
ஒவ்வொரு அமைதியான
அக்காவின் பெயருக்குப் பின்பும்
சுட்டித்தனமான தங்கையின்
சேட்டை உண்டு!

எழுதியவர் : சண்முகப்பிரியா (5-Aug-20, 11:45 pm)
சேர்த்தது : Shanmu
பார்வை : 1150

மேலே