இன்று தான் என் இனம் விதைக்கப்பட்டது !

எங்களை ஈழ இனமாக மட்டும் தான்
பாதிர்களா ?
என் குலம் கதறியது கேட்க்கவில்லையா !
என் இனம் சின்னாபின்னமாக
சிதைக்கப்பட்டதை பார்க்கவில்லைய
இவுலகம் !
நாங்கள் இன்றுதான் எரிக்கபட்டோம் !
பூமியில் குழிதோண்டி புதைகபட்டோம் !
கண்ணீரோடு கடற்கரையில்
நிற்கின்றோம் எங்கள் கண்ணீராவது
உங்கள் காலடயில் வந்து சேரும்
எங்களை கரை சேர்பிர்கள் என்று !
பாருங்கள் என்குலம் சீரழிக்கபட்டதை
சிதைக்கபட்டதை சின்னபின்னமக்கபட்டதை
குழிதோண்டி புதைக்கப்பட்டதை !

நாங்களும் மனித இனம் தானடா!


இந்தியனாக வாழ பெருமைபடுவதா !
இல்லை என் இனத்தை அழிப்பதற்கு
துணைபோகும் சிலருக்காக
தன்மான தமிழன் தலைகுனிவதா !
வெள்ளைகொடி தூக்கி சமாதானம்
பேசவன்தோம் ஆனால்
என் இனம் சமாதி ஆக்க பட்டது !
என் இனத்தில் எத்தனை
கதறல்கள் !
ஆறாக ஓடியது
எங்கள் குருதிகள் !
கடலாக
மாறியது எங்கள் கண்ணீர் துளிகள் !
எத்தனை நாடகம் தான் நடந்தது
என் இனம் அழிப்பதற்கு !
மிருகா இனத்தில்கூட சேர்க்க
முடியாத அரக்ககுணம்
உடையவனே கேளடா !
அளிக்கபட்டுவிட்டோம் என்று
ஆணவம் அகந்தை வேண்டாம் !
நாங்கள் விதைக்கபட்டுளோம்
ஒருநாள் மரங்களாக வருவோம்மாடா !
அன்று உங்ககளை உரங்களாக
எங்களுக்கு விதைப்போமாடா !

தமிழினம் என்று
சொல்லும்போது
தலைநிமிர்ந்து நிற்போம் !
என் இனம் என்று
சொல்ல்ம்போது
எழுந்து நிற்போம் !

என்றும் தன்மான தமிழனாக வாழும்
ச.பாலமுருகன் { குட்டி }
வெட்டுவாக்கோட்டை

எழுதியவர் : ச.பாலமுருகன் ,வெட்டுவாக்க (19-Sep-11, 5:09 pm)
சேர்த்தது : balamurugan
பார்வை : 372

மேலே