இறைவன்
காற்றுக்கு குணம் உண்டா என்று கேட்பின்
காற்றுக்கு குணம் உண்டு தென்றலாய்த்
தீண்டும் போது அணைக்கும் போது
சூறாவளியாய் சாடும்போது சுவையுமுண்டு
காற்றுக்கு பூமலர்களின் வாசம் ஏந்திவரும்போது
காற்றுக்கு உருவமுண்டா என்றால் அது
கண்களுக்கு நம் கண்களுக்கு புலப்படவில்லை
வாயுதேவன் அவன் தானோ ......
இறைவனும் அப்படித்தான் நிர்குணன் அவனே
சர்குணனும் அவனே ஒரு குணமும் சரியா
அமையா நாம் குணக்குன்றை அறிவதெப்போது