கொரோனா
*அ*ரசனையும் பாக்கல நானு
*ஆ*ண்டியையும் பாக்கல நானு
*இ*னம் மொழி மதம் நாடு பாக்கல நானு
*ஈ*தைக் கொடுத்து தின்னுவேன் நானு
*உ*லக அழகினு பாக்கல; உள்ளூர் கிழவியும் விடல நானு
*ஊ*ற வச்சு அடிக்கிறே நானு
*எ*ல்லைங்கிறது எனக்கு இல்ல
*ஏ*தும் அறியா பிள்ள போல நான் வந்துடுவே
*ஐ*யம்தா வரும் என்ன அறிஞ்சா
*ஒ*ட்டுமொத்தமா கைது பண்ணி கூட்டுக்குள்ளடைச்ச கொல்லுயிரி நானு
*ஓ*ய்வறைத் தேடி செல்ல மாட்ட
*ஔ*டதம் எனக்குத் தரும் வரை,,,,,,,,,,,,,