நீ உதிர்க்கும் அமில வார்த்தைகள் 555


அன்பே...


உன் கோபப்பார்வை என்மீது
வீசும் போது எல்லாம்...

என் முகம் வாடினாலும்

என் உள்ளம் சிரிக்குமடி...

கடற்கரையில் உன்னுடன் நான்

கைகோர்த்து நடக்கவோ...

பூங்காவில் மடிமீது
தலைசாய்க்கவோ...


திரையரங்கில் திருட்டு
முத்தம் கொடுக்கவோ...

உன்னை நான்
காதலிக்க வில்லையடி...

முற்பொழுதும் உன்
கற்பனையில் வாழும் எனக்கு...

எப்பொழுதும் என் அருகில்
நீ
வேண்டும் என் துணையாக...


நீ கோபமாக உதிர்க்கும் அமில
வார்த்தைகளும் எனக்கே சொந்தம்...

உன் அன்பிற்கு நான் மட்டுமே
உரியவனாக வேண்டும்...

என் கோபக்கார
செல்லக் கிளியே.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (8-Aug-20, 6:09 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 251

மேலே