காதல் காய்ச்சல்

வந்தார்கள் வென்றார்கள்
என்பது போல..
"நீயும்" வந்தாய்...! !
என் இதயத்தை
உன் வேல் விழியால்
தாக்கிவிட்டு சென்றாய்...! !

நான் காதல் காய்ச்சல்
கொண்டேன்...
என்னால்....
தாங்கவும் முடியவில்லை
தூங்கவும் முடியவில்லை..! !

விரைந்து வா...
மருந்திட்டு செல் என்றேன்.
மறுநாள் வந்தாள்...
மயக்கத்தில் இருந்த
என்னை...
இறுக்கி அனைத்து
தன் செவ்விதழ் கொண்டு
முத்தமிட்டால் மருந்தென்று...! !

என்ன மாயமோ..மந்திரமோ..
என் காதல் காய்ச்சல்..
போயே போச்சுங்க...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Aug-20, 7:07 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal kaaichal
பார்வை : 93

சிறந்த கவிதைகள்

மேலே