கொரோனா -கோவிட-19
கொரோனா கொரோனா
மனுசன் அலறும் மரண கானா!
உலகமே அரண்டு கிடக்குது உன் பயத்துல
உன் அட்டகாசம் ஒவொருநாளும் தாங்கமுடியல!
வூஹானில் உருவானதே கொம்பு முளைத்த வைரசு
கட்டம் கட்டி அடக்கியது சீனாவின் அரசு!
புரியாமல் தவித்தன பல உலக பேரரசு
பதைபதைத்து போட்டனரே ஊரடங்கு உத்தரவு !
தனித்திரு விழித்திரு வீட்டிலிரு என்றது தமிழக அரசு
தவறாமல் கடை பிடித்ததில் தப்பிச்சது பல உசுரு!
தனி மனித சுதந்திரம் பேசி அடக்க மறுத்தது அமெரிக்கா அரசு
தத்தளிக்குதே தலை குனிந்து ஒண்ணாம் நம்பர் வல்லரசு!
பல நாளா வேலை இல்ல
பர்ஸுல பணமும் இல்ல
குழந்தைகள் படிக்க பள்ளியும் இல்ல
கூடி களிக்க திருவிழா இல்ல
பொருளாதாரம் சுணங்கி நிற்குது
எதுவும் புரியாம ஏழை ஜனம் முழிச்சு நிக்குது
தளர்ந்து விடாதே மனிதா
தகர்ந்திடும் எல்லாம் இனிதா!
தொண்டையில் நிக்கும் போதே கொல்ல லேனா
வளர்ந்து முடக்கிடுமே மூச்சியை தானா!
பயப்படாதே மனிதனே வீணா
மருந்து உருவாகுது வேகவேகமா!
இந்தியாவில் கட்டுக்குள் இருக்குதே கொரோனா
இதற்கு சாப்பாட்டில் மூலிகை சேர்ப்பதே காரணம் அம்மா!
கபசுர குடிநீரை காய்ச்சியே குடி
அதுவே கொரோனாக்கு சித்த மருந்து கொடுக்கும் சவுக்கடி!
எதுவானாலும் கையை கழுவு
வாய் மூக்க கவனமாக பொத்து
அரசு சொல்லும் வழிமுறையை ஒத்து
வாழ்ந்திட்டால் அகலுமே ஆபத்து!
சீர்தூக்கி பார்த்ததில் சித்த மருந்தால் சேதாரம் இதுவரை இல்லை
ஏனெனில் அது ஆதி சிவம் தமிழில் கொடுத்த அற்புத மருந்து கலவை!
பக்குவமாய் பதம்செய்தே குடும்பத்தோடு குடி
கொடுத்திடுவோம் கொரோனாவுக்கு மரண அடி!