என் காதல் எழுதுகோல்
ஒவ்வொரு முறையுன்
உனைபற்றி எழுதும்போதும்
புதிதாய் காதல் மகுடம் சூட்டி
கொள்கிறது என் எழுதுகோல்...
உன்னை காணாத நேரங்களில்
உன்னோடு பேச விரும்பும்
வார்த்தைகளை எழுதியே
தீர்கிறது கவிதையாய்
என் காதல் எழுதுகோல்....
நான் எழுத நினைக்கும்
வார்தைகளை வரிகளாய்
வடிவமைத்து மௌன
புன்னகைத்து வசைபாடுகிறது
நான் எழுதிய பக்கங்களை விட
கிறுக்கிய பக்கங்கள் அதிகமென்று...
பக்கங்கள் தீர்கிறது என்
எழுதுகோலும் என்னங்கலும்
உன்னை சுற்றிதிரிந்தபடி....
கொஞ்சம் பயமாதான்
உள்ளது இன்னும்
எத்தனை பக்கங்க்ள்
திரபோகிறதோ என்று.....
எழுதிய பக்கங்களில்
சேர்ந்திருக்கும் வரிகள்
நம் காதலின்
நெருக்கதை சொல்கிறது
பிரிந்திருக்கும் வரிகளோ
நம் பிரிவின்
வலியை உணர்த்துகிறது....
என்னதான் இருந்தாலும்
என்னைவிட என்
எழுதுகோலுக்கே உன்மீது
காதல் அதிகம் அதனால்தான்
தினம்தினம் தன் உதிரம் தந்து
உயிர் கொடுகிறது என்
காதல் கவிதைகளுக்கு....
நம் பிரிவினை தாங்கிகொள்ள
முடியாமல் தினம் அழுதுபுலம்புகிறது
என் எழுதுகோல்-இதன்
கண்ணீர் ஒவ்வொரு பக்கதிலும்
முற்று பெறாமல் சற்று
ஈரமாகிய படி கற்று
கொடுகிறது காதலின் வலியை....
பிரிவு சோகம் ஏமாற்றம்
ஏக்கம் வலி இவைகளை
மட்டுமே அரிந்த என்
எழுதுகொலும் அது
எழுதிய பக்கங்களும்
உன் வருகைகாக
காத்திருகிறது எனைபோல...