மாண்புமிகு மாணவன்
நான் படித்து பட்டம்
பெற்றவன்...
கல்லூரியில் பலருக்கு
பாடம் நடத்தும்
பேராசிரியர்....! !
இருந்தும்...! !
"நீ " நடத்தும்
காதல் வகுப்பில்
உன் முன்னால்
கைகட்டி, வாய்பொத்தி
அமர்ந்திருக்கும்
முதல் வகுப்பு
மாண்புமிகு மாணவன் நான்...! !
--கோவை சுபா