வெட்கம் கொண்ட வெண்ணிலவே 555

ப்ரியமானவளே...

உன் வெட்கள்
கலந்த
புன்னகையில்...

என்னை பார்க்காமல்
மண்ணில் கோலம் போடும்...

உன் விரலை பார்த்துக்கொண்டே
உன் காதலை சொன்னாய்...

உன் கைகளில் தஞ்சம்
கொண்ட கைக்குட்டையை...

காகிதமாய் கசக்கினாய்
உன்
காதலை சொல்லி முடிக்குமுன்னே...

அந்த சுகமான நிமிடத்தை இப்போது
நினைத்தாலும் சுகம்தானடி...

உன்னால் எனக்குள்
ஒருகர்வம் உண்டு...

உன்னை முதன் முதலில் வெட்கப்பட
வைத்தவன் நான் என்பதால்...

வெட்கம் கொண்ட

வெண்ணிலவே...

என்னை நீ சூடிக்கொள்ள
போகும் நாளேது.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (10-Aug-20, 6:11 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 335

மேலே