நட்பெனும் நண்பன்
நட்பெனும்_நண்பன்
கொடுத்ததைக் கேட்காமல்
இருப்பது நட்போ
கொடுத்ததைப் பகராமல்
மறைப்பது நட்போ
கூடி வாழ்ந்து
மகிழ்வது நட்போ
கூக்குரலுக்கு ஓடி
வருவது நட்போ
துன்பத்தில் தோள்
சாய்வது நட்போ
துயிலாக் கனவுக்கு
நிறமளிப்பது நட்போ
கேளிக்கைக்குத் துணையாய் துணைவருவது நட்போ
கேட்டால் எதையும்
தருவது நட்போ
எதுவும் செய்ய
துணிவது நட்போ
எதையும் இழக்க
நினைப்பது நட்போ
உணர்வுக்கு உறவாய்
உறைவது நட்போ
உறவுக்கு உயிரை
கொடுப்பது நட்போ
நட்பின் ஆழத்தை அளப்பது கடிது
அன்பின் உணர்வை உணர்வது எளிது
நட்புக்குள் என்றும் வரையறை இல்லை
புரிதல் ஒன்றே நட்பின் எல்லை
#சரவிபி_ரோசிசந்திரா