அவளின் அதிசய பேச்சு 💥

அவளின் அதிசய பேச்சு. 💥

நான் இது வரைக்கும் யாரையும் காதலித்தது இல்லை.
ஆனால் இந்த கூட்டத்தில் உள்ள ஆண்மகன்கள் பலர் எனக்கு  காதல் தூண்டியல் போட்டதுண்டு.
அதில் நான் ஒரு நாளும் சிக்கியது கிடையாது.
அந்த ஆருயிர் தோழர்களை இன்னமும் நேசிக்கிறேன் தோழர்களாக.
ஏன் நான் அவர்கள் விரும்பும் காதலை ஏற்கவில்லை.
காரணம் தெரியவில்லை.
அதை நான் ஆராய்ந்ததும் இல்லை.
காதல் தவறு என்றும் நான் நாளும் கூறியது இல்லை.

இங்கே பல காதல் கதைகள் அறங்கேறியள்ளது,
அறங்கேற தயார் நிலையிலும் உள்ளது.
காதல் புனிதமானது, பவித்தரமானது, என்பது
என்னுடைய கருத்து.
ஆனால் நடைமுறையில் பல காதல் அவசர சிற்றுண்டி போல் முடிந்துவிடுகிறது.
பல காதல் நம்பிக்கை துரோகம் செய்கிறது.
பல காதல் காமத்தில் லயித்து அதன் புனிதத்தை கெடுக்கின்றன.
இங்கே சில காதல் மட்டும் போராடி வெற்றி பெறுகிறது. 

அதனால் காதலிப்பவர்ளே,
என் அருமை தோழிகளே,தோழர்களே
காதலியுங்கள், போராட்டம் குணம் உள்ளவர்கள் மட்டும்.

நீங்கள் காதலுக்கு மட்டும் தான் போராட்ட குணம் வேண்டும் என்பதில்லை
வாழ்க்கையை எவன் ஒருவன் போராட்ட குணத்துடன் அனுகுகிறானோ
அவன் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி அடைவான்
இது உறுதி
இது நானாக கூறவில்லை
வெற்றி அடைத்தவர்களின் வரலாறு கூறுகிறது.

நண்பர்களே உங்கள் நட்புபை கடைசி மூச்சு உள்ளவரை மறவாதீர்.
காரணம் நட்பு வானத்தை விட உயர்த்து.

பாசமிகுந்த என் சகோதர, சகோதிரிகேள,
நீங்கள் யாரையும் மதிக்காமல் இருக்கலாம்
ஆனால் வயது மூப்பு உள்ளவர்களை மதியுங்கள்
முதியவர்கள் நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்
அவர்களின் எச்சம்
மிச்சம் நம் வாழ்க்கை
அவர்கள் ஆலமரம்
அதில் நாம் விழுதுகள்
நம் படிப்பு பணம், அறிவு, தரும்
அவர்கள் அனுபவம் நமக்கு நல் வாழ்க்கை தரும்.

வாழ்க்கை இறைவன் அளித்த வரம்
வாழ்க்கை இறைவன் அருளிய வரபிரசாதம்
வாழ்க்கையை நேசிப்போம் நேர்மையுடன் வாழ்வோம்.

       - பாலு.

எழுதியவர் : பாலு (14-Aug-20, 9:27 am)
சேர்த்தது : balu
பார்வை : 167

மேலே