காலமும் கோலமும்

வாழ்க்கை என்பதொரு
மிக நீண்ட பயணம் -
வந்ததும் போனதும் என்பதும் அனுபவம் ............

எதிர்பார்த்தது இங்கு ஏமாற்றும்
எதிர்பார்க்காதது அதிகம் பறைசாற்றும் ...........

காலத்தின் கடுமையான சோதனைகளில்
மனிதனின் மாண்புகள்
மாற்றங்களுக்கு உள்ளாகின்றன .................

மனிதன் மிருகமாவதும்
மிருகம் மனிதனாவதும் சாத்தியமே ...............

கடவுள்கள் கல்லாவதும்
கற்கள் கடவுளாவதும்
வாதத்தின் வெற்றி .................

எல்லாம் நிறைந்ததாய் நினைக்கும் உலகில்
இரக்கமும் அன்பும்
ஆழ்ந்த உறக்கத்தில் -
மனிதனோடு மனிதநேயமும் சுயநலத்தில் ..............

துடிக்கும் மனிதனையும் பார்த்து
எட்டி நடக்கும் எதார்த்தம் அதிகம்
சாக்கடை சாயலில்
புண்ணியத்தின் உருவகம் ..............

புருவங்களுக்குள் மறைந்திருக்கும்
பொய்களின் வசியம்
வார்த்தைகளில் புதைந்திருக்கும்
வன்முறை ரகசியம் ...............

கொடுங்கோலாளர்களின் கொடுமை
அடக்குதல் அடக்குதல் .....................

காலமும் கோலமும் தொடந்தபடியே ...............

எழுதியவர் : விநாயகமுருகன் (14-Aug-20, 7:29 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 69

மேலே