ஓருயிர்
இரவுகள் ஆயிரமாகலாம்
இரவல்கள் ஆரியிராகிடுமே
தென்திசை தென்றலில்
தேன்மழைச் சாரளிதுவே
விழியதில் விளக்கேற்றி
விடியலதில் விளக்கமானதே
மனங்களால் மணந்தபின்
மனிதர்களால் மனமொடிதலிது
தூரமெதுவாயின் பாரமில்லை
தூய்மையன்பு பார்த்துகொள்ளுமே
நெஞ்சில் நிலைத்தபின்
நஞ்சால் நிலைகுலையாகிடுமோ
வழிமுறை தவராயின்
வாழ்முறை தவரலாகிடலாமோ
என்றென்றும் நினைவிலிருக்கும்
வென்றிங்கு நிலைத்திருக்குமே
ஓர்முறை உயிராயின்
வேர்வரை உயர்வாகிடுமே
இருவிழியில் ஓர்பிம்பம்
ஒருவழியில் இருபிம்பம்
திகைக்கும் காலமாறும்
திளைக்கும் தினமேறுமே
ஒவ்வொருகனமும் ஒளிமயமாகும்
வாழ்ந்திடுமே வாழ்த்திடுமே
வாழ்க நினைவுடன்
வளர்க நிலையுடன். . .