பொன் எழுத்துக்கள்

காதல் விலையற்ற சொர்க்கம்
காவியம், கவிதை ,ஓவியம்
காதலால் பட்ட கடனே ......
இந்த விலையற்ற காதல்
ஒப்பற்ற இதயம் எனும் மாளிகையில்
ஓர் இருக்கையில் இரு மனங்களாய் ,
இதயம் இனிய அன்பெனும்
இழைகளினால் வார்க்கப் பட்டது
இதை உணர்ந்து கொண்ட மனிதன்
கட்டுகிறான் காதல் சாம்ராஜ்ஜியம்
அதில் இருவர் மட்டும் மன்னர்கள்
காதலன் காதலி இருவர் பெயரும்
ஒவ்வொரு இதயத்திலும் பொன் எழுத்துக்களில்
உண்மை காதல் ஒழிவதில்லை அங்கே
அன்புஎனும் ஒளி மட்டும் பிரகாசமாய்
வாழ்கின்றதே உயிரோடு உயிராக,

எழுதியவர் : பாத்திமாமலர் (14-Aug-20, 11:30 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : pon eluthukkal
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே