காணவில்லை

காணவில்லை!

சிறுவயதில் பறந்து சென்ற சிறகுகளை காணவில்லை!

பற்களில்லா பாட்டி சொல்லும் பழமொழியை காணவில்லை!

பலகாலமாய் ருசித்து வந்த பலகாரத்தை காணவில்லை!

பொழுதுகளை சுழலடித்த பம்பரத்தை காணவில்லை!

இலங்கையிலே கிளம்பிவரும் வானொலியை காணவில்லை!

துன்பம் என்றால் வந்துசெல்லும் சொந்தங்களை காணவில்லை!

ஆடி என்றால் ஓடிவரும் திருவிழாவை காணவில்லை!

காலையிலே ஆப்பம் சுடும் அன்னமாளை காணவில்லை!

வறுமையிலும் மனம் மகிழ்ந்த தருணங்களை காணவில்லை!

மருந்துக்கென்றே குணமுடைய மனிதர்களை காணவில்லை!

மொத்தத்திலே வாழ்க்கையெனும் வானவில்லை காணவில்லை!

எழுதியவர் : (14-Aug-20, 9:44 pm)
பார்வை : 47

மேலே