வேம்பு அண்ணன்
கண்கள் பனிக்கின்றன...
கைகள் நடுங்குகின்றன...
நெஞ்சைக் கடும் வேதனை..
துயரம் தாக்குகின்றன...
வேம்பு அண்ணன்
பிரிவுச் செய்தி கேட்டு...
கல்லிடை பிறந்த அண்ணன்
உழைப்பால் எப்போதும் வல்லினம்..
இருந்தும் அழகிய தன்
மனதால் என்றும் மெல்லினம்...
எல்லோரிடமும் இரக்கம்
காட்டுவது அண்ணனுக்கு
உயிர் போன்றது...
இரக்கமில்லா கொரோனா
அண்ணனின் உயிர் பறித்தது...
நல்வழிகள் தெரிந்து வாழ்ந்தவர்
எம் விழிகள் நனைந்து
இதயம் பிசைந்து
பிரிந்து செல்வதேனோ...
அண்ணனின் வாழ்க்கை
ஒரு தன்னலமற்ற அதிசயம்..
நம்மைப் பிரிந்து போவதில்
இவ்வளவு ஏன் அவசரம்...
எளிமையாய்ப் பழகும் விதத்தில்
எல்லாத் தரப்பினரிடமும்
அண்ணனின் மதிப்பு
மிக மிக உயரம்...
அன்பினால் கூடுகட்டி வாழ்ந்த
இந்த அபூர்வப் பறவை
நம்மைவிட்டுப் பறந்து போவது
நமக்கு மிகுந்த துயரம்...
இறைவனின் திருவடிகளில்
அண்ணனின் ஆன்மா
அமைதி கொள்ளட்டும்...
அண்ணனின் பிரிவைத்
தாங்கும் வலிமை
நமக்கெல்லாம் கிடைக்கட்டும்...
ஆழ்ந்த இரங்கல்கள்...
- இரா.சுந்தரராஜன்...
🙏😭💐🙏