நினைவுகள்

நாம் நினைப்பவைகள் எதுவும் நடக்காது என்று என்னும் போது நெஞ்சம் சற்று குமுறத்தான் செய்கிறது. ஆசைகள் நிறைவேறவில்லையே என்று தினம் கவலைக் கொண்டதில் மனம் நோய் கொண்டது. கனவுகள் கூட கணக்கத் தொடங்குகிறது. இதுவரை நிழல்களுடன் நிஜங்களாக வாழ்ந்தது போதும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. தோல்விகளை மட்டும் சுமக்க எப்படித்தான் விரும்புகிறதோ நம் மனது தெரியவில்லை.! நடக்காது என்று தெரிந்தும் எதிர்காலத்தில் மாற்றமுண்டு என்று எண்ணிஎண்ணி நிகழ்காலத்தில் வாழாமலே இறந்துவிட்டது வாழ்க்கை. ஒரு நாள் மாறிவிடும் நம் வாழ்க்கை என்று எண்ணத் தொடங்கி நிமிடங்கள் நேரங்களாயின, நேரங்கள் தினங்களாகின, தினங்கள் வாரங்களாகின, வாரங்கள் மாதங்களாகின அப்படியே கடந்து, இன்று பல வருடங்களை இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது.! இனியும் நிழலில் நிஜங்களை இழக்க விருப்பம் இல்லை.! இரவுகளில் எல்லாம் தூக்கம் தொலைத்த அந்த இரவுகளை எண்ணிப் பார்க்க முடியவில்லை ! இனி வரும் நாட்களில் முடிவுரைகள் கூட முற்றுப்புள்ளியின்றிதான் தொடங்க வேண்டும். இதுவரை நாம் உதறிய பணிகள் எல்லாம் பனித்துளிப்போல
புன்னகையுடன் ஒரு பூந்தோட்டம் அமைக்கும். இப்படி புதிதாய் பல இலட்சியங்களை நாம் நிரப்ப வேண்டும் நம் இதயத்தில்... இது நாள் வரை விலை கொடுத்து
வாங்கிய புன்னகை எல்லாம் இனி நம் இதழ்களின் பக்கத்தில் காத்து கிடக்கும். நாம் தொலைத்த வெற்றிகள் எல்லாம் ஒரு புது முகவரி தேடித் தரும் .
✍🏻 பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (16-Aug-20, 9:24 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
Tanglish : ninaivukal
பார்வை : 758

மேலே