திருந்திய மனம் - பாகம் 5 

பாரியை அறுவை சிகிச்சைக்கு தயார் செய்து கொண்டிருந்தனர் . அதற்குள் இலக்கியா , அவள் அலுவலகத்தில் போன் செய்து யாராவது முடிந்தால் இரத்த தானம் கொடுக்க முடியுமா என்றும் எந்த குரூப் தேவை என்றும் கூறினாள் . அவளின் நண்பர்கள் மிகவும் துரிதமாக செயல்பட்டார்கள் . அந்த உதவும் மனப்பான்மை என்பது எப்படி இருக்கும் என்பதை அவரவர் அலுவலகங்களில் காணலாம் . எனக்கும் அந்த மனோபாவமும் அனுபவமும் உண்டு . 


கால் மணி நேரத்தில் சுமார் 20 பேர் வரிசையாக அவளின் அலுவலகத்திருந்து வந்தார்கள் . அதற்குள் நர்ஸ் அருகே வந்து 10 பேர் கொடுத்தால் போதும் என்றாள் . அவர்களில் 10 பேர் உடனடியாக நர்ஸ் அழைத்து சென்ற அந்த அறைக்குள் சென்றார்கள் . இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் , வந்தவர்களில் அனைத்து மதத்தையும் சார்ந்தவர்கள் என்பதுதான் . ரத்தத்திற்கு சாதி மதம் கிடையாதே . மனித உள்ளங்களில் மட்டுமே தான் அது இருக்கிறது . 


சரியாக அரைமணி நேரம் கழித்து பாரியை ஆபரேஷன் செய்யும் அறைக்கு அழைத்து சென்றார்கள் . அதைப்பார்த்து இலக்கியா ஓவென்று அழதாள் . அவளைவு நண்பர்களும் அவளது பெற்றோரும் ஆறுதல்கூறி ஆசுவாசப்படுத்தினார்கள் . அதற்குள் அவளது நெருங்கிய தோழியான ஸ்வாதி ஒரு காபி வாங்கி வந்து அவளை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தாள் . ஆனாலும் அங்கு கூடியிருந்த அனைவரின் முகத்திலும் ஒருவித சுகம் நிறைந்து இருந்ததை கவனிக்க முடிந்தது. இலக்கிய இரத்த தானம் வழங்கிய அந்த 10 நண்பர்களுக்கும் தனித்தனியாக நன்றி கூறினாள் . சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அந்த பெரியவர் முகமது ஹனிபாவும் அங்கு வந்தார் .அப்போதுதான் ஆபரேஷன் செய்த அந்த அறையைவிட்டு வெளியே வந்தார் . உடனே அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டு விசாரிக்க ஆரம்பித்தார்கள். அவர் அந்த பெரியவரையும் இலக்கியாவையும் அழைத்து , எல்லாம் நல்லபடியாக முடிந்தது . ஒன்றும் பயமில்லை . மயக்கம் தெளிய எப்படியும் ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகலாம் . ஆகவே அவரை உள்ளேயே ஒரு அறைக்குள் படுக்க வைத்திருக்கிறோம் . பிறகு அறைக்கு மாற்றுவார்கள் . ஆனால் அவரை அதிகம் தொந்தரவு கொடுக்காமல் இருங்கள் . உடனே இலக்கியா அவரது பெற்றோரை கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டாள் . அந்த பெரியவர் ஹனிபா டாக்டரிடம் ஏதோ பேசிக்கொண்டே அவரது அறைக்குள் சென்றார் .


பிறகு சிறிது நிமிடங்கள் கழித்து இலக்கியாவிடம் ஒன்றும் கவலைப்படாதே , எல்லாம் சரியாகிவிடும் . எப்படியும் இங்கு ஒருவாரம் தங்கி இருக்க வேண்டி இருக்கும் . நான் நாளைக்கு வந்து பார்க்கிறேன் . அடுத்த வாரம்தான் நான் ஊருக்கு செல்கிறேன் என்று கூறி விடைபெற்றார் . இலக்கியா உடனே அவளது ஆபிசுக்கு போன் செய்து அனைத்து விவரங்களையும் விளக்கி கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்தாள் . அவளது அப்பா , இலக்கியா நீயும் அம்மாவும் இங்கேயே இருங்கள் . நான் சென்று ஏதாவது டிபன் வாங்கி கொண்டு வருகிறேன் என்று மெல்லிய குரலில் கூறினார் . ஆனாலும் அந்த பேச்சில் பாசமும் கடமையும் பொறுப்புணர்வும் கலந்து இருந்ததை உணர முடிந்தது . 
ஒரு பிரச்சினை அல்லது ஆபத்து என்று வருகிற போதுதான் மனிதனின் உணர்வுகள் வெளிப்படும் . அந்த நேரத்தில் சாதிமதங்கள் மறைந்து மனித நேயம் நிமிர்ந்து நிற்பதக இயற்கையின்  நியதி  . 

எழுதியவர் : பழனி குமார் (20-Aug-20, 9:43 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 25

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே