திருந்திய மனம் - பாகம் 7 

இலக்கியா கூறியபடி ஆறு நாட்கள் கழித்து பெரியவர் ஹனிபா அவர்கள் காலையில் ஒரு பழக்கூடையுடன் வந்தார் பாரியை காண்பதற்கு . அவரை வரவேற்று பாரி உள்ள அறைக்கு அழைத்து சென்றாள் இலக்கியா . இவருக்காகவே காத்திருந்த பாரி அவரைக் கண்டதும் எழுந்திருக்க முயன்றான் . உடன் ஹனிபா அவனை சைகை மூலம் அமர சொல்லிவிட்டு அருகிலேயே தானும் அமர்ந்தார் . பாரி அவரின் கையை பிடித்து கண்ணீர் மல்க நன்றி கூறினான் . உங்கள் உதவியை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது ஐயா , என்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவன் நான் என்றான் தழுதழுத்த குரலில். அதுமட்டுமன்றி , உங்கள் பணத்தை எப்படியாவது விரைவில் தந்துவிடுவேன் . ஆபிசில் அந்த ஒரு கணிசமான  தொகையை அளிப்பதற்கு ஒப்புக்கொண்டனர் . மேலும் அதனுடன் சேர்த்து என்னிடம் உள்ள மிச்ச பணத்தையும் கொடுத்துவிடுகிறேன் ஐயா என்றான் .


பாரி நான் அதை கேட்பதற்காக இங்கு வரவில்லை , உன்னை பார்க்கவே வந்தேன் . இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா என்று மனதில் நினைத்து கொண்டான் . சிறிது நேரம் பேசிவிட்டு அவர் கிளம்பிவிட்டார்  . உடனே பாரி எழுந்து அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு , மனித நேயம் என்பதை உங்கள் உருவில் நான்  காண்கிறேன் . மீண்டும் நன்றி கூறி அவர்கள் இருவரும் அவரை வாசல்வரை வந்து வழியனுப்பினர் . 


அவர் சென்றதும் பாரி இலக்கியாவிடம் , எவ்வளவு பெரிய மனது கொண்ட மனிதர் இவர்.... இந்த காலத்திலும் சாதி மதம் பற்றி எள்ளளவும் நினைக்காத , காட்டிக்கொள்ளாத உயர்ந்த நெஞ்சம் இவருக்கு . உடனே இலக்கியா குறுக்கிட்டு ஆனால் நீங்கள் தான் அன்று ஊட்டியில் வேற்று மதம் என்பதற்காக அவர் வீட்டில் தங்குவதற்கு யோசித்தீர்கள் . மதங்களை விட மனிதநேயம் என்பதுதான் உலகில் சிறந்தது . இனியாவது நீங்கள் இந்த சாதிமத பேதங்களை விட்டொழியுங்கள் . மனிதன் என்பதைவிட மனிதம் தான் இமயத்தைவிட உயர்ந்தது இவ்வுலகில் . நாம் பிறக்கும் போது ஏதுமறியாமல் தான் வருகிறோம் மண்ணிற்கு ....அதேபோல போகும்போது நாம் எதையும் எடுத்து செல்வதில்லை என்று ஒரு பாடமே எடுத்துவிட்டாள் இலக்கியா . பாரி உறைந்து போய் நின்றான் .... தான் செய்த தவறை எவ்வளவு அழகாக எடுத்து கூறிவிட்டாய் ...உண்மையில் நீயும் மிக உயர்ந்து தெரிகிறாய் எனக்கு என்று இலக்கியாவை புகழ்ந்தான் .


இந்த பாழாய்ப்போன சாதியையும் மதமும் மனிதனை எப்படி கெடுக்கிறது ...அதுமட்டுமல்லாது மனிதனை பிரிக்கிறது . இந்தளவு முன்னேறிய விஞ்ஞான உலகில் , இன்னும் சாதி மதமென்று மதம் பிடித்து அலைகின்ற கூட்டம் உள்ளவரை மனிதம் வளராது , மாறாக முற்றிலும் அழிந்துவிடும் . 


      
  பழனி குமார்               

எழுதியவர் : பழனி குமார் (20-Aug-20, 9:46 am)
பார்வை : 69

மேலே