ஓதின ஓதலோ சிறு கதை
ஓதின ஓதலோ
○•○
கயல்விழி டிகிரி வாங்கியவர்க்கு பட்டம் அளிப்பு விழாவில் பெருமை பாராட்டும் வகையில் இரண்டு வார்த்தை பேச கயல்விழியை நியமித்தார்கள்
கயல்விழி பேசியது
எல்லோருக்கும் எனது இதயம் கனிந்த வணக்கம் என்னை பேசவைத்தார்கள் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கு
அது எனக்கு என்று நண்பர்களும் கிடையாது பகைவர்களும் கிடையாது, அதேபோல் காதலர்களும் கிடையாது, காதல் தோல்வியால் சாதலர்களும் கிடையாது அதனால தான்
உங்க கிட்ட யாரும் நெருங்க முடியாத அளவுக்குப் பார்த்து கொள்கிறீர்கள் அதுதான் அந்த டெக்னிக் எப்படி என்பதை தெரிந்து கொண்டால் அடுத்த வர்க்கு உதவியாக இருக்கும் என்றார்கள்
நான் டென்த்ல படிக்கிறப்போ ஒரு பணக்கார வீட்டு பையன் என்னை சந்தித்து கயல்விழி நம்ம க்ளாஸ்ல இருக்கிற பொண்ணுங்களை விட நீ ஒருத்தி தான் நிறமா லட்ஷனமா அப்பல் அலம்பல் இல்லாமல் அடக்கமாக அமைதியாக அம்சமாக கெத்தாக இருக்கே டென்த்ல மட்டும் இல்லை இந்த ஸ்கூல்லேயே உன்னை மிஞ்சி ஒருத்தியும் கிடையாது என்றான்
இப்போ நீ என்ன சொல்ல வந்த, என்னசொன்ன, ஏன் எதுக்குனு எனக்கு ஒன்னும் புரியவில்லை என்றேன்
ஏன் சுத்தி வலைப்பானே நான் ஸ்டிரைட்டா மேட்டருக்கு வந்துடுறேன் உன்னை எனக்கு நிறைய வழிய புடிச்சிருக்கு
அதுக்கு
ஜ...லவ்....யூ...கயல் உன் விருப்பத்தை
நான் தெரிஞ்சிக்கலாமா
என் விருப்பத்தை சொல்லவா ஸ்டிரைட்டா போலீஸ் ஸ்டேஷன் தான் என்றேன்
ஓக்கே தேங்ஸ் என்றான் அன்னையில் இருந்து நான் எந்த திசையில் திரும்பினாலும் அவன் அந்த திசையில் தென்பட்டதில்லை
ஒரே...கைத்தட்டல்...ஒரே...விசில்....சப்தம் அரங்கிற்கு மெருகூட்டியது
அடுத்து டுவல்த்ல வாத்தியாரே அங்கே வா இங்கே வா என்றெல்லாம் அழைப்பார் ஒரு மேத்சை சொல்லி பொர்டுல போடச் சொல்வார் மேல கையை போட்டு பேச உயர்த்துவார் அதற்குள் நான் ஒதுங்கிக் கொள்வேன்
ஓர் நாள் க்ளாஸ் ரூமில் தனியாக மாட்டிக் கொண்டேன் வாத்தியார் உள்ளே வந்தார் இதற்கு மேல் என்ன செய்வது என்று எனக்கு தோன்றவில்லை என்னையறியாமல் என் வாய் நாலு வார்த்தை பேசியது
உடனே வெளியில் போய்விட்டார் வாத்தியார், வாய் என்ன பேசியது என்ன எனக்கு ஏதாவது ஆச்சின்னா சுப்ரீம்கோர்ட்டில் கையைக் கட்டிப் பதில் சொல்ல வேண்டி வரும் வாத்தியார் வேலை அப்பீட் என்று
வாத்தியார் என்ன நினைத்து வெளியில் போயிருக்கலாம் என்று நினைத்து பார்த்தேன் என்னடா பன்னிரண்டாவது படிக்கும் போதே சுப்ரீம் கோர்ட்டு பத்தி பேசுகிறாள் எனக்கே என்னென்ன வழக்குக்காக என்னென்ன கோர்ட்டு இருக்கின்னு ஒருவேளை வழக்கறிஞர் மகளா இருப்பாளோ இருக்கலாம் அப்பாடா என் வாத்தியார் வேலை தப்பித்து விட்டது என்று யோசித்து இருப்பார் என்று நினைக்கிறேன்
ஒரே...கைத்தட்டல்...ஒரே...விசில்....சப்தம் அரங்கிற்கு மெருகூட்டியது
காலேஜ் ஸ்டேஜிக்கு போனபிறகு ஒரு ஈ எறும்பு கூட எம்மேல உட்கார பயந்து போயிற்று காரணம் டுவல்த்ல என் கூட படித்தவர்கள் இப்போது என்கூடவே காலேஜ்மெட்கள் அவர்கள் ஓதின ஓதலோ என்னவோ தெரியவில்லை
நேச்சுரலாக எனக்கு ஒரு கோர்ட்டை பத்தியும் ஒரு மண்ணும் தெரியாது அப்படி இருக்க எப்படி என்று கேழ்க்கிறீங்க அப்படி தானே சொல்றேன்
எங்க வீட்டில் எனக்கு எங்க அப்பா தான் சுப்ரீம் கோர்ட் , சுப்ரீம்கோர்ட்டு வரைக்கும் கொண்டு போக வேண்டி வரும் என்றால் இதற்கு அப்பா கிட்ட சொல்வேன் என்ற அர்த்தத்தில் சொன்னது
அதேபோல் எங்க வீட்டில் எனக்கு என் அண்ணன் தான் போலீஸ் அதிகாரி அவர் பாக்சிங் கற்றவர் அவர் வரைக்கும் கொண்டு போக வேண்டி வரும் என்றால் இதற்கு அண்ணன் கிட்ட சொல்வேன் என்ற அர்த்தத்தில் சொன்னது
இப்படியாக சொல்லிச் சொல்லி என்னை இங்கே கொண்டுவந்து என்னை பேசவைக்கு பாக்கியத்தை நான் பெற்றேன் இதற்கு வாய்ப்பு அளிதவர்களுக்கும் என் பேச்சை வரவேற்றவர்களுக்கும் அத்தோடு இவ என்னடா ஒரேடியாக அறு அறுன்னு அறுக்குறா என்று நினைத்தவர் களுக்கும் எனது வணக்கத்தையும் நன்றியையும் கூறி விடை பெறுகிறேன் வணக்கம்.
□
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்.