வீழ்வது மகிழ்ச்சி

கீழே வீழ்வது
மகிழ்ச்சிதான்
கூடைப்பந்து
விளையாட்டில்..! !

ஆம்..! !
இந்த விளையாட்டில்
பந்து கூடையில்
கீழே வீழ்வது
மகிழ்ச்சிதானே...! !

அதுபோல்...
வாழ்க்கை
என்ற விளையாட்டில்
கீழே வீழ்வது வீழ்ச்சியல்ல
எழுச்சியின் வளர்ச்சியென
சிந்தித்து விளையாடுங்கள்
கூடைப்பந்து விளையாட்டின்
தத்துவத்தை
மனதில் நிறுத்தி...! !

செல்லும் பாதை
சரியாக இருந்தால்
வீழ்ச்சியும் மகிழ்ச்சிதான்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Aug-20, 10:26 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : veezvathu magizhchi
பார்வை : 66

மேலே