நகரும் நாட்கள்
,..................
தூங்காத இரவுகள்
தொலைந்த கனவுகள்
விடியாத காலைகள்
சீரில்லா காலைக்கடன்கள்
குளிர் தரா குளியல்கள்
சில சிந்தனைகளோடு சிற்றுண்டி
நாற்காலியோடு நகரும் பகல்
பசிக்காமல் புசிக்கும் பகல் உணவு
சோர்வுடன் சேர்ந்த சாயங்காலம்
புத்துணர்வு புகுத்திடா தேநீர்
இறங்க மறுக்கும் இரவு உணவு
வேகம் துறந்த நாள் பொழுது
சிரித்த முகம் கனத்த மனதோடு
மீண்டும் தூங்காத இரவுகள்..
................
சாம்.சரவணன்