ஆண்கள் தின வாழ்த்து

------------
ஆண் பிள்ளைக்காக பெருந்தவம்
புரியும் அன்னையோர் பலர்..
சான் பிள்ளையாயினும் ஆண் பிள்ளையென
சாக்கு போக்கு சொல்லுவோர் சிலர்..

தான் ஆணென்ற அகம்பாவமுணர்வோனுக்கு
அன்பென்பதோ எட்டாகனி எப்போதும்..
ஈன்றவள் தவிர ஏனையோர் எப்போதும்
எட்டி நின்று காலம் கடத்துவர்..

ஆண்கள் அதிகம் அழுவதில்லையனைவர் முன்
அழக்காரணம் மிகுந்திருப்பினும்..
அவ்வழுகை தன் சார்ந்தோரை காக்கயெண்ணி
அகத்தோடடங்க காலமெடுக்கும் அவனுக்கு..

ஆயிரம் சிந்தனைகள் அகத்தினுளெப்போதும்
அத்தனையும் தன் சார்ந்தோர் நலம் காண..
அன்பு கோடி மனதுக்குள்ளிருந்தாலும்
ஆணெப்போதும் பெண்ணுடன் தோற்பான்..

ஆண்கள் மனதிலெப்போதும் ஓடும்
தன் குடும்பத்திருக்கென தனி வீடு
பிள்ளைக்கு தரமான கல்வி தர
பெற்றோருக்கு சரியான கவனிப்பு தர
கடைசி கால கஷ்டமில்லா வாழ்க்கை வாழ..

இளவயதில் மிடுக்காக உலாவியவன்
திருநாளன்று கூட புத்தாடை விரும்பா
புத்தனாய் மாறினும் புத்தாடையுடனுள்ள
பிள்ளைபெண்சாதியை பார்த்து பூரித்து போவான்..

அக்கால ஆண்கள் ஆதிக்கமுணர்ந்ததாலோ
ஆண்கள் தினம் அன்றில்லை..
இல்லத்திலிருப்பவருடன் இடைவெளி குறைந்தால்
இக்கால ஆண்களுக்கு தனிதினம் தந்ததாரோ..

அதிர்ஷ்டசாலி ஆண்களுக்கு
ஆண்கள் தின வாழ்த்து குவியும்..
அவ்வாழ்த்து வராத ஆண்கள்
நமக்கு நாமே வாழ்த்து சொல்லி
இந்நாளையும் நன்னாளாக்குவோம்..
---------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (20-Aug-20, 11:16 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 2587

மேலே