இனி நமக்காக துடிக்கவை என் இதயத்தை 555

***இனி நமக்காக துடிக்கவை என் இதயத்தை 555 ***


என்னுயிரே...


நான் உயிர் வாழ எனக்காக
துடித்த என் இதயம்...

உன்னை கண்ட நாள் முதல்
உன்னை பார்பதற்காவே துடித்தது...

உன்னை நேசிக்க
ஆரமித்த நாள்முதல்...

உன்னுடன் சேர்ந்து
வாழ்வதற்காவே துடிக்குதடி...

நான் உன் நினைவுகளுடன்
வாழ்ந்துவிடுவேன்...

உன்னுடன் சேர்ந்து
வாழ்வதுதான் கஷ்டம்...

வேடந்தாங்கல் பறவைபோல
என் வாழ்வில்
நீ வந்து சென்றுவிட்டாய் ...



நீ வந்த சுவடுகள் என்னில்
இன்னும் மறையவில்லையடி...

துடிக்கும் என் இதயதுடிப்பை
நீ நிறுத்திவிடாதே...

உனக்காக துடிக்கும்
என் இதயத்தை...

இனி நமக்காக
துடிக்கவை
என் இதயத்தை.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (25-Aug-20, 10:05 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 479

மேலே