உன் நினைவுகளோடு சேர்ந்து வாழவே விதி எனக்கு 555

என் விதி...


தினம் நான் சாலையோரம்
செல்லும் போதெல்லாம்...

மிதிவண்டியில் ஒலி
எழுப்புவாய் என்னருகில் வந்து...

தினம் தினம் ஒலி எழுப்பி என்
இதயதுடிப்பை அதிக படுத்தினாய்...

சாலையில் ஏதேனும் மிதிவண்டி
ஒலி கேட்டாலே...

நீதான் என்று சாலையில்
உன்னை தேட வைத்தாய்...

உன்
தோழிகளுடன் வந்து...


ஜாடையில் பலமுறை
பேசுவாய் என்னிடம்...

தெரிந்தும் தெரியாமலே உன்னை
கடந்து செல்வேன்...

படபடக்கும் நெஞ்சோடு...

மிதிவண்டியில் இரு
சக்கரம் இருந்தும்...


சேராமல்
இடைவெளியில் தத்தளிக்கும்...

நம் மனதுக்குள்
காதல் இருந்தும்...

சில காரணங்கள் நம் இடைவெளியை
இணைக்காமலே இருந்தன...

நான் பாவப்பட்ட
ஜென்மமா...

இல்லை பாவை உன் பார்வை
பட்டதால் பரிதவிக்கும் ஜென்மமா...

உன்னுடன் சேர்ந்து வாழ
விதியில்லை எனக்கு...

உன் நினைவுகளோடு சேர்ந்து
வாழவே விதி எனக்கு...

ஆண்டுகள் பல கடந்தும்
அந்த பழைய நினைவுகள்...

சில நேரங்களில் வந்து
செல்லுதடி [டா] பசுமையாக.....முதல் பூ பெ.மணி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (26-Aug-20, 10:06 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 555

மேலே