யார் காரணம் மாதவியா தொடர்ச்சி பாகம் 3

மணிமேகலை துறவிற்கு தாய் மாதவி தான் காரணமா ? (தொடர்ச்சி _பகுதி 3 _ஆராய்வோம்).
_________________________________________

" புரிந்த றம் படுத்தினாள்" என்பது முக்கியம் என பார்த்தோம்.
நாம் எடுத்துக்கொண்ட ஆய்விற்கு இன்னும் சில பகுதிகளை ஆராய்வோம் .தாய் மாதவி மிக தீர்க்கமாக சொல்லிவிட்டாள் .மகள் மணிமேகலை தவ வாழ்வு வாழ வேண்டியவள் என்று .ஆனால் மணிமேகலையின் மனம் தவ வாழ்க்கைக்கு தயாராக இருந்ததா ? அப்போது அவளது நிலை என்ன?
வயந்த மாலையும் தாய் மாதவியும் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட மணிமேகலை கண்ணீர் பெருக கட்டிக்கொண்டிருந்த மாலையில் கண்ணீர் பட்டு நனைந்து போக அதைப்பார்த்த மாதவி சோலையில்சென்று பூப்பறித்து வருக என மணிமேகலையிடம் கூறக் அதைக்கேட்ட சுதமதி என்ற தோழி பூங்கொடி யாளாகிய மணிமேகலை தனியே செல்ல வேண்டாம் எனக்கூறி சுதமதியும் மணிமேகலையுயுடன் சென்றாள்.
மணிப் பூங் கொம்பர் மணிமேகலை தான்
தனித்து அலர் கொய்யும் தகமையாள் அல்லள் என்கிறாள்.
இருவரும் சோலைக்குள் போக அப்படி சோலைக்குள் போகும் வழியில் வியப்புற்றுசெல்லும் ஜனங்களும்; பித்தனுடைய விகார செயல்களை கண்டு வருந்தி நிற்கும் ஜனங்களும்; கூத்தை கண்டு நிற்கும் ஜனங்களும் தெருவின் இரு புறத்துமாளிகைகளில் எழுதப்பட்டுள்ள சித்திரங்களை கண்டு வியப்புற்று இருக்கும் ஜனங்களும் இப்படி கூட்டம் கூட்டமாக சென்று கொண்டும் ரசித்து கொண்டும் இருக்கும் மக்கள் மணிமேகலையும் சுதமதியும் கண்டு அவளைச் சூழ்ந்து கொண்டு ஒரே குரலாக வாய்விட்டுச் சொன்னார்கள்.
"மிக்க அழகுடைய இவளை த்தவவழியில் புகுத்திய தாய் மிகக் கொடியவள்".

"அணி அமை தோற்றத்து அருந்தவப் படுத்திய தாயோ கொடியள் ;தகவு இலள் ஈங்கு என்றனர்."
இவையெல்லாம் கேட்டு சோலைக்குள் சென்ற மணிமேகலையை தொடர்ந்து வந்த உதயகுமாரன் அவளை எப்படியும் அடைந்தே தீருவேன் என்கிறான் .பளிக்கறையினுள்ளே மறைந்து கொள்ளுகிறாள். சுதமதியை பார்த்துவிட்டு ஏன் இங்கே தனித்து நிற்கிறாய் எனக் கேட்டு மணிமேகலையை தேடிய உதயகுமாரன் அவளை எப்படியும் என் தேரில் அழைத்து வருகிறேன் எனக்கூறி செல்லுகிறான்.
அன்பு இல்லாதவள் என்றும் தவஉணர்ச்சி இல்லாதவள் என்றும் வான காப்பிலல் என்றும் விலைமாது என்றும் என்னை உதயகுமாரன் இகழ்ந்தான்.அதையும் நினையாமல் என் மனம் அவன் பின்னே செல்கிறதே ?இதற்கு காரணம் யாது?காமத்தின் இயல்பு இதுதானோ ? என்கிறாள் மணிமேகலை .அப்படியாயின்அக்காமம் கெடுக என்கிறாள்.
"கற்புத் தான் இலள் நல் தவ உணர்வு இலள்
வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று
இகழ்ந்தனன்ஆகிநயந்தோன்என்னாது
புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை
இதுவே ஆயின் கெடுக தன் திறமை என"........
சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை.....
____________________________
இதுதான் காமமா என்று கேட்ட மணிமேகலை முன்பு மணிமேகலா தெய்வம் மாயவித்தை செய்பவள் ஆகிய ஒரு மடந்தை வேடம் பூண்டு அவர்கள் முன் தோன்றியது. இங்கு நிற்க காரணம் யாது ?என கேட்க தான் வந்த வற்றையும் உதயகுமாரன் கூறியதையும் கூறி மணிமேகலை வேதனையையும் சுதமதி சொல்ல அதற்கு மணிமேகலா தெய்வம் இது முனிவர்களின்வனம். இதில் தீங்கு செய்யலாகாது என்று எண்ணியே அவன் அவளை விட்டு நீங்கினான் என்று கூறினாள்.
சக்கரவாளக் கோட்டத்து கதையைச் சொல்லச் சொல்ல சுதமதி தூங்கலுற்றாள். உடனே மணிமேகலையைப் தழுவி எடுத்துக்கொண்டு ஆகாய வழியே முப்பது யோசனை அளவு தெற்கே சென்று கடல்சூழ்ந்த மணிபல்லவம் என்னும் சிறு தீவை அடைந்து அதிலேயே மணிமேகலையை வைத்துவிட்டு மணிமேகலா தெய்வம் சென்றது.
பின் விடிந்தால் மணிமேகலையை எப்படியும் நான் அகப் படுத்திக் கொள்வேன் என்று காமமுடனிருந்த உதயகுமாரன் முன்சென்று அறவழி சொல்லிவிட்டு உவவனம் சென்று தூங்குகின்ற சுதமதியை எழுப்பி "யான் மணிமேகலா தெய்வம் "மாதவிக்கு என்னை முன்னமே தெரியும் .அவளிடம் போய் சொல். இன்றைக்கு ஏழாவது நாள் தன் முற்பிறப்பை அறிந்து கொண்டு மணிமேகலை வேறு வடிவம் கொண்டு இங்கு தோன்றுவாள். அப்போது இந்நகரில் பல அற்புதங்கள் நிகழும் என சொல்லி ;மணிமேகலையை மாதவி கருவுற்று பெற்ற போதே மாதவியின் கனவில் தோன்றி "காமன் செயலற்று இயங்கும் வண்ணம் ஆசையை முற்றக் கெடுக்கும் தவமாதைப் பெற்றாய் "என்று சொல்லி வந்தேன் என்றாள்.
காமன் கையற கடுநவை அறுக்கும்
மாபெரும் தவ கோடி ஈன்றனை என்றேன்.
இங்கே மணிமேகலா தெய்வம் இவள் தவம் ஏற்பாள் என முன்னமே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மந்திரம் கொடுத்த காதை.....
மணிபல்லவத்தில் தனித்திருந்து மணிமேகலை முன் புத்த பீடிகை தோன்றியது. மணிமேகலையின் பழம் பிறப்பை தெரிவித்தது .இது இந்த ஆராய்ச்சிக்கு தேவைப்படுகிறது .அசோதரநகரத்து அரசனாகிய ரவிவனம்என்பவனுடைய தேவியின் வயிற்றில் பிறந்த இலக்குமி தான் நீ .அத்திபதி அரசனுக்கும் நீலபதி என்பவளுக்கும் பிறந்தவன் ராகுலன் .இருவரும் மணமுடித்து என்னைவணங்கி தர்மம் கேட்க இன்றைக்கு பதினாறாம் நாள் திடம் உள்ள விஷப்பாம்பால் ராகுலன் இறப்பான். நீ அவனோடு தீயில் பூகுவாய். பின்பு காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்து ஒரு துன்பம் வரும்போது மணிமேகலா தெய்வம் உன்னை ஒரு சிறு தீவில் வைத்து முற்பிறவியை சொல்லும் என்று அருளிச் செய்தது நினைவுக்கு வர மணிமேகலைக்கு முன் மணிமேகலா தெய்வம் வந்து முற்பிறப்பில் இருந்த ராகுலனேஉதயகுமாரன் என்றும் அதன் மற்ற கதைகளையும் கூறி மணிமேகலை; நீ வேற்று வடிவம் கொண்டு செல்லவும் ஆகாய வழியே சஞ்சரிக்கவும் இரண்டு மந்திரங்களை உபதேசித்து பின் பசி தீர்க்கும் மந்திரத்தையும் உபதேசித்து விட்டு ஆகாயமார்க்கமாக சென்றுவிட்டது மணிமேகலா தெய்வம்.
(தொடர்ந்து பார்ப்போம் அடுத்த பாகத்தில்)

எழுதியவர் : சு.இராமஜோதி (27-Aug-20, 5:58 am)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 63

சிறந்த கட்டுரைகள்

மேலே