வீம்புக்கு விலை கட்டுரை
அடர்ந்து படர்ந்து வானளாவ உயர்ந்து
அழகிய விருட்சமாக வெயிலின் நிழலாக
மழையில் குடையாக, மனிதனுக்கு மட்டுமல்ல
அனைத்து வகை உயிரினங்களுக்கும்
அடைக்கலம் தரும் ஒரு அற்புத ஆலமரம்
வீதியின் ஓரமாய் ஒய்யாரமாய் ,
புயலோ மழையோ காற்றோ அதற்கு
இடரில்லை
எத்தனை ஆண்டுகள் கடந்து வந்தாலும்
பலமும் படைகளும் அதன் கூடவே
அது வேர் ஊன்றிய மண்ணின் பெருமையும்
நீரின் வளமும் நிலைத்து அது வாழ வழியாய்...
அண்ணார்ந்து பார்க்க,
வியந்து போற்ற, வாழ்த்த தக்க, அந்த ஆலமரம்
மரங்களுக்கெல்லாம் தலையாய்
தனித்துவமாய் நிற்கிறதே ஏன்/ ஏன் /
அதன் விலைமதிப்பில்லா
அறம்காக்கும் குணம் .
இதை என்னவென்று சொல்வது .
அந்த நிழலில் பயன் காணும் மனிதன் உட்பட
உயிரினங்களால் உணரத்தான் முடிகிறதா/
பகுத்தறிவிருந்தும் மனிதனிடம்
இந்த புரிந்துணர்வு, பெருந்தன்மை இல்லை
சிந்திக்கும் திறன் கொண்ட மனிதன்
சிந்திக்க நேரமில்லை, தோணுவதுமில்லை
விண்ணை அளக்கத் துடிக்கும் மனிதன்
மண்ணையும் மரத்தையும் அவற்றின்
சாதனைகளையும், சரித்திரங்களையும் வீணாக்கி விடுகின்றான்
வீம்புக்கு விலை போகின்றன மண்ணும் மரங்களும் .