முடியாதுகளின் அர்த்தம்

அர்த்தமற்ற ஒரு தொடுதலை

இன்று ஏனோ விருப்பமுற்றேன்..

உன் விருப்பம் அறியாமல்

உன் அனுமதியே இல்லாமல்

உன்னை கட்டிலில் கிடத்தினேன்..

நீ கிடந்தாய் இதழ்களற்ற ஒரு மலரைப் போல

உன் உடலில் இப்போது ஒரு துண்டு துகிலில்லை

நானும் அவிழ்த்தேன் என்னை அம் மணமாக

இத்தனை இடைவேளியோடு ஒரு முத்தம்

இதுநாள் வரையில் நீ அளித்து நான் அறிந்ததில்லை

எத்தனை நுகர்ந்தும் என் நாசியை தீண்டவில்லை

உன் உடலின் வியர்வையில் வழிந்தோடும் காமவெப்பங்கள்

என் முதுகில் தடம் பதிக்கும் உன் நகக்கிரல்களின் வலி இரத்தப் பாய்ச்சலற்று கிடக்கின்றது

நான் காமவெளியில் பயணிக்க புத்துணர்வளிக்கும் உன் இதழ்களின் முனுமுனுப்பு இன்று ஏனோ அடங்கிவிட்டது

உன்னுள் நான் இயங்கினேன்
முன்னும், பின்னும் ஒரு ஊஞ்சல் போல
ஒரு சுயநலமான காமத்தோடும், என் ஆண்மையின் செருக்கோடும்

உச்சமென்று நான் உணர்ந்த வேளையில் உன் உடலில் ஒப்புக்கும் உணர்ச்சியில்லை

அடங்கிய காமத்தோடு நான் அருகே கிடக்கையில்

பகிர்ந்தளித்த சுகத்திற்கு பரிசாய் நீ கொடுக்கும் சிறு முத்தம் இன்று உன் உறக்கத்திற்கு அப்பால் சென்றுவிட்டது

காய்ந்த கன்னத்தோடு நான் காத்திருந்த நொடிகளில் உணர்ந்தேன் எங்கோ ஈர விசும்பலோடு உன் கண்கள் சுரக்கும் நீர்த்துளிகளை சொட்டு சொட்டாக

விருப்பமற்ற ஓர் உறவில், காதலற்ற உன் காமத்தில் மூழ்கிய வேளையில் நான் கண்ட சுகம் என்ன இருக்கிறது

நிரம்பிய கேள்வியோடு தான் என் விழி மூடப்போகிறேன்

உரிமை இருப்பதால், விருப்பமற்ற ஓர் உறவை, உன் உணர்ச்சியுள்ள உடலுக்கு இனி ஒருபோதும் அளிக்க கூடாதென்று...

எழுதியவர் : S.Ra (27-Aug-20, 9:34 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 263

மேலே