பிஞ்சு பாதங்களில் வெள்ளி கொலுசு 555

என் செல்லமே...


உன் பிஞ்சு பாதங்களில்
வெள்ளி கொலுசணிந்து...

மண்ணில் நீ எட்டு வைத்து
நடக்கும் போதெல்லாம்...

ஒலிக்கும் கொலுசின் ஓசை
என் செவிகளில் கேட்குதடா...

உன் பிஞ்சு
பாதங்களால்...

தந்தையின் நெஞ்சின் நடக்க
போவது எப்போது...

உன் கொலுசின் மொட்டுக்களை நீ
தொட்டு பார்க்கும் போதெல்லாம்...

என் கன்னத்தை கிள்ளி பார்ப்பது
போல் எனக்கு தோணுது என் தங்கமே...

உன் கொலுசு அனிந்த
பாத சுவட்டினை...

உன் தந்தையின் நெஞ்சில்
பதிய வைப்பது எப்போது என் மகனே.....


முதல் பூ பெ.மணி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (27-Aug-20, 10:24 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 5041

மேலே