வேண்டும் - வேண்டேன்

வளர்ச்சி வேண்டும்; பெரு மலர்ச்சியும் வேண்டும்!
வனங்களை அழித்து வளர்ச்சியை வேண்டேன்!
உயர்ச்சி வேண்டும்; அருமுயற்சியும் வேண்டும்!
அகிலத்தை சிதைத்து அயர்ச்சியை வேண்டேன்!.

நேர்மையும் வேண்டும்; அதில் நியாயமும்வேண்டும்!
மனங்களை அழிக்கும் வேற்றுமை வேண்டேன்!
தூய்மையும் வேண்டும்; மிக்க துணிவும் வேண்டும்!
மதங்களை துதிக்கும் மனங்களை வேண்டேன்!

தலைமை வேண்டும்; அங்கே துணிவும் வேண்டும்!
சொல்லாடல் கொண்ட வாய் சொல் வேண்டேன்!
பெருமை வேண்டும்; புது எழுச்சியும் வேண்டும்!
அல்லாடல் தீண்டும் வாழ்வுதனை வேண்டேன்!

எழுச்சி வேண்டும்; நல்புரட்சியும் வேண்டும்!
வல்லாடல் ஏற்கும் வெறியாளன் வேண்டேன்!
எல்லாமும் வேண்டும்; எல்லார்க்கும் வேண்டும்!
அல்லாரை ஏத்தும் வல்லானை வேண்டேன்!

எழுதியவர் : து.கிருஷ்ணமூர்த்தி (28-Aug-20, 5:55 am)
பார்வை : 50

மேலே