காதல் தோல்வி

காதல் என்பது வாழ்வில் வருவது
ஒரேயொரு முறைதான் -நம்
இருவர் இடையே வளர்ந்த
காதலும் அப்படித்தான் என்று
நான் நினைக்க இன்று வந்து
நீகூறுகின்றாய் ' பெண்ணே இந்த
நம் காதலை மறந்துவிடு' என்று
இப்படி கூறுவதோடு, பெண்ணே
உன் உயிரை மறந்து விடு ' என்று
நீ கூறி இருக்கலாமே .....
என் காதல் உண்மைக்காதல் உன்மீது
'காதலை மறந்துவிடு என்கிறாய்
இதோ மறந்துவிட்டேன் ...../ என்றாள்
மயங்கி வீழ்ந்தாள் அவன் மடியில் ....
மீண்டும் எழுந்திருக்கவே இல்லையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Aug-20, 8:04 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 66

மேலே