அவள்
மலர்விழியாலே உந்தன் பார்வை
சொல்கிறது நீமென்மை யானவள்
ஒளிரும் உந்தன் கமலமுகம்
ஒளிக்காது சொல்கிறது உந்தன்
உள்ளம் தூய கமலமென்றே
உன்னில் கள்ளம் ஏதுமில்லை
என்று சொல்கிறதே உன்புன்னகை
நீசிரித்தாய் முத்து உதிர்ந்தது
உந்தன் சிரிப்பின் இலக்கணமாய்
ஆறுகெஜ சிங்கிடிப் புடவையால்
உந்தன் அழகை எல்லாம்
பூட்டி வைத்தாய் எனினும்
உன்னாலும் பூட்டி வைக்க
முடியவில்லை உந்தன் பொங்குமிளமை
அதைப் பார்த்த என்னுள்ளம்
நீஎன்மனதில் எப்போது வருவாய்
என்னவளாய் என்று ஏங்குகிறது