நிலவும் நானும்

வான் நிலவே உன்னைப்பார்த்தே
வளர்ந்தவள் நான் ... சிறுமியாய்
வளர்ந்த ஆரணங்காய் ,' ஆரணங்கே
உன்னைப்பார்க்கையில் உன்னழகை
அந்த வான்நிலவும் பொறாமைகொள்ளுமே
என்பதாய் இருக்கிறதே ; என்றான் என்னவன்
அவன் புகழ்ச்சியினால் ஆணவம் என்னுளத்தில்
பொங்கியது......கொஞ்சம் யோசித்தேன் நிலவே
என் ஆணவம் காற்றோடு போனது.... நான்
நிலவை ஒக்கும் வடிவழகியே...... ஆனால்
காலச்சக்கரத்தின் போக்கில் என் இந்த
என் யவ்வனம் தேய்ந்து போக ,,,, முதுமை
தாக்க நான் தேய்ந்த நிலாவே....நீயோ
நிலவே... வளர்ந்து... தேய்ந்து... வளர்ந்து...
இப்படியே போக நீ என்றும் இளமை நிலாவே '
'இளைய நிலா .... வருகிறது .... உலாப்போக'
காதலன் பாடுகிறான் நிலாவைப்பார்த்து !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Sep-20, 8:18 pm)
Tanglish : nilavum naanum
பார்வை : 98

மேலே