பொற்குடம்போல் ஆலயம் நீவர தேவியாய்

நெற்றி யினில்திருநீற் றுக்குருக்கு பொட்டிட்டு
நற்கருங் கூந்தலில் பூச்சரம் சூடிநீ
பொற்குடம்போல் ஆலயம் நீவரின் நாத்திகனும்
சொல்வான் நமச்சிவா யம் !

நெற்றி யினில்திருநீற் றுக்குருக்கு பொட்டிட்டு
நற்கருங் கூந்தலில் பூச்சரம் சூடிநீ
பொற்குடம்போல் ஆலயம் நீவர நாத்திகனும்
கற்பான் கடவுள் வழி !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Sep-20, 10:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே