சுட்டிப் பெண்ணே ஓடிவா
சுட்டிப் பெண்ணே ஓடிவா
சோம்பல் அகற்றி ஓடிவா
கட்டத்துக்குள் காய்கள் நகர்த்தி
சதுரங்கம் ஆடலாம் ஓடிவா!
குழிக்கு ஐந்து சோழிகள் நிரப்பி
பல்லாங்குழி ஆடலாம் ஓடிவா!
பாம்பில் சறுக்கி ஏணிகள் ஏறி
பரம்பதம் ஆடலாம் ஓடிவா!
மரபாச்சி பொண்ணு மாப்பிள்ளைக்கு
மணமுடித்து ஆடலாம் ஓடிவா!
கற்களை சுண்டி கட்டத்தில் நொண்டி
கூடிநாம் ஆடலாம் ஓடிவா !
சின்னஞ்சிறு செப்பில் கறிசோறு பொங்கி
சேர்ந்துண்டு ஆடலாம் ஓடிவா!
சுட்டிப் பெண்ணே ஓடிவா
சிரித்து மகிழ்ந்து ஓடிவா