விபத்து இல்லா தமிழ்நாடு - 1செய்ய வேண்டியவை 2செய்ய கூடாதவை

விபத்து இல்லா தமிழ்நாடு
1.செய்ய வேண்டியவை
2.செய்ய கூடாதவை

முன்னுரை :
எதிர்பாராத நேரத்தில் ஒரு மனிதனின் வாழ்வில் அடையும் தீராத சோகமே விபத்தாக அமைகிறது. வாழ்வின் சுழற்சியில் சாலை விபத்தானது ஒரு மனிதனின் வாழ்கை சக்கரத்தை மாற்றி விடுகிறது. என்ன வென்று சொல்வது சாலை விபத்தின் விளைவுகளை! வருமுன் காப்பதே மேல் ! ஆகவே விபத்தை தவிர்த்து விபத்து இல்லா மாநிலமாக அமைய ஒரு தனிமனிதனாய் இந்த சமூகத்தில் செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை பற்றி இக்கட்டுரையில் காண்போம் .

ஓரே கல்லில் இரண்டு மாங்கா :
இந்தியா ஒரு வருடத்தில் விபத்தில் மட்டும் ஐந்து லட்சம் உயிர்களை இழக்கின்றன . உலகில் சீனா நாடு அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும் . இந்தியா மக்கள் தொகையில் சீனாவை விட சில எண்கள் தான் குறைவு .இந்தியா வருடத்தில் ஐந்து லட்சம் உயிர்களை சேமித்தால் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறிவிடும் மற்றும் ஐந்து லட்சம் உயிர்களை சேமித்த நாடாக மாறிவிடும்.இதுதான் “ஓரே கல்லில் இரண்டு மாங்கா”.

செய்ய வேண்டியவை :
“டிரின்க் அன்ட் டிரைவ் கூடாது” என்று சொன்னால் மட்டும் போதாது அதற்கு முக்கிய நடவேடிக்கையாக டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும்.வேகத்தை கட்டுபடுத்த அனைத்து வாகனங்களிலும் ‘Speed ‘o’ Meter’ இண்டிகேட்டர் பொருத்த வேண்டும். வாகனங்களில் செல்லும் போது செல்லிடப்பேசில் Driving Mode -யை ஆன் செய்யவும். வாகனங்களுக்கு இடையே 50 மீட்டர் இடைவேளி வீட்டு செல்லவும்.

செய்ய கூடாதவை :
வாகனங்களில் அதிக பொருட்களை ஏற்றிச் செல்ல கூடாது. ஹெல்மட் அணியாமல் வாகனங்களில் செல்ல கூடாது.இரு சக்கர வாகனங்களில் இரண்டு நபருக்கு மேல் பயணம் செய்ய கூடாது . பதினெட்டு வயதிக்கு கீழ் உள்ளோர் வாகனங்களை ஓட்டக்கூடாது.

முடிவுரை :
விபத்து!! தமிழ்நாட்டில் ஒரு நாளில் குறைந்தபட்சம் இருபது உயிரிழப்புகள் , ஒரு வாரத்தில் நூறு உயிரிழப்புகள்.ஒரு மாதத்தில் ஐநூறு உயிரிழப்புகள் , ஒரு வருடத்தில் சராசரியாக ஐயாயிரம் உயிரிழப்புகள் நினைத்து பாருங்கள் ஒரு நொடி இது வெறும் கட்டுரை மட்டும் அல்ல. பல உயிர்களை காக்க பின்பற்றும் வழிமுறைகள் . தலையாய் கடமையாய் ஏற்போம்! உயிர் காப்போம் !

எழுதியவர் : ச.சரண் 8 - TH (6-Sep-20, 3:37 pm)
சேர்த்தது : Saran S
பார்வை : 120

சிறந்த கட்டுரைகள்

மேலே