உதட்டின் கீழ் மச்சமோ

ஆசையாய் உன்னைப் பார்த்தேன்
ஆனந்தத்தால் பெருங்கூச்சலிட்டேன் - உன்
கண்ணின் கருமணிகள் காதலை சொல்லியது
இமைகள் இரண்டுங்கூட இசை மத்தளம் வாசித்தது
நெற்றியின் சுருக்கங்கள் நீரலையை காட்டியது
கன்னத்தின் ஒளி மின்னல் கவி பாட தூண்டியது
உதட்டின் கீழ் மச்சமோ உன்மேல் ஆசையை கூட்டியது
பல்லின் சீர்வரிசை என்னுள் பரவசத்தை ஊட்டியது
காதின் குருதியோட்டம் கட்டியணைக்க இழுத்தது
கந்தகமாய் நானிருக்கேன் காற்றாய் நீ வந்தால்
கச்சிதமாய் இணைந்தவாறு காதலால் கலந்திடலாம்.
------ நன்னாடன்.