காதல் ஏந்தி வந்த தென்றல்
உன்னைத் தொட்ட தென்றல் வந்து
என்னைத் தொட்டது அது அதில்
ஏந்திவந்தது உந்தன் காதல் உள்ளம்
என்மீது நீகொண்ட காதல் அது
என்மீது பட்டவுடன் ஒரு இன்ப
மின்சாரம் என்னுள் பாய்ந்தது
என்னுள்ளே நீயே பரவி இருப்பதுபோல்
ஒரு காதல் உணர்வும் தந்து
அதற்கு நன்றி சொல்வேன் நானே
தென்றலே உனக்கு