பரிணாமம் அடைந்த காற்று

காற்றின்றி பூக்காது போற்றத்தகுந்த பூக்கள் தான்
பூக்களின் மேலான மோகத்தால் காற்றது புயலாச்சு
புயலின் வேகந்தான் பல பூக்களுக்கு குதுகலம்
பூக்களாய் நாமிருந்தால் புல்லரிக்கும் நம் தேகம்
மகரந்தம் காயாக மாயக்காற்று வேண்டாமோ
மலர் காயாய் மாறாவிட்டால் மலட்டு தன்மை அடையுமே
மலர்கள் போல பல மங்கைகளுக்கும் முரட்டு தன்மை குதுகலம்
மயக்குங்காற்று பல பொழுது மாயாவியாய் மாறிடும்
மண்ணில் பெரும் மாற்றம் செய்து விட்டு ஒடுங்கி பதுங்கிடும்.
------ நன்னாடன்.