உடலும் ஆன்மாவும்

பல்லியின் வால் தானே உடலிலிருந்து
விடுபட்டு கீழே விழுந்து விடுபட்டபின்னும்
துடிக்க கண்டேன் பல்லியோ உயிருடன்
சுவரின் மேல் போய்க்கொண்டிருக்க கண்ட
நான் புரிந்துகொண்டேன் இப்போது
அருமறையாம் கீதையில் கண்ணன் கூறியது
அதுதான் ஆன்மா வேறு அழியும் உடல் வேறென்பது
பல்லியின் அழியும் உடலின் ஒருபகுதி
வால் விழுந்தது கீழே அழிய அழியுமும் துடித்து
பல்லியோ சுவரில் அதன் ஆன்மா அதன் உடலில்
பல்லி மாய்ந்தால் அதனுள் இருக்கும் ஆன்மா
போய்விடும் வேறு கூடு தேடி எப்படி
தீயவன் ஒருவன் தலைவேறு கால்வேறு
என்று வெட்டி வீழ்த்திய உடலின் முண்டம்
வீழ்ந்தவன் இறந்தும் அப்பள்ளியின் வாள்போல் துடித்த அடங்கும்
அவனுள் உயிராய் இருந்த ஆன்மா உடல்
வீழ்ந்த அக்கணமே வேருடன் தேடி போனதே

மனிதா உனக்கேன் ஆணவம் நீயார்
உடலா.... இல்லை அதனுள் உறையும் ஆன்மாவா
கொஞ்சம் யோசித்து சொல்வாயா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Sep-20, 2:43 pm)
Tanglish : udalum anmaavum
பார்வை : 136

மேலே